குற்ற வழக்குகளை மறைத்தாரா உதயநிதி ஸ்டாலின்.? தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!
தொகுதியில் தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் தனது மனுவில குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஒரு சில வாரங்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக உயதநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம், திவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகள் பற்றிய தவறான தகவல்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
மேலும், தொகுதியில் தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என அறிவிக்க வேண்டும் எனவும் தனது மனுவில குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஒரு சில வாரங்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
இந்த வழக்கால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்ற ராமு என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.