முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி பேஸ்புக்கில் அவதூறு: வாலிபர் மீது வழக்குப்பதிவு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி ஆபாசமாக அவதூறான முறையில் கருத்து ஒன்று பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணியின் நிர்வாகி ஜெபா ஜாண் தக்கலை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். புகாரை தொடர்ந்து ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் கருத்தை பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu