தி.மு.க. எம்.பி. முந்திரி ஆலையில், பா.ம.க. நிர்வாகி அடித்து கொலை! எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்!

கடலூர் திமுக எம்.பி. முந்திரி ஆலையில் பணியாற்றிய பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2021-09-22 05:24 GMT

கடலூர் திமுக எம்.பி. முந்திரி ஆலையில் பணியாற்றிய பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அருகே உள்ள பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றிய தொழிலாளியும், பாமக நிர்வாகியுமான கோவிந்தராசு, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இவரது மரணம் கொலை என்றும், இதற்கு எம்.பி. ரமேஷ் எனவும், அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும்தான் காரணம் என்று கூறி அவரது மகன் செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 


இந்நிலையில், இந்த மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலிடம் தொலைபேசியில் பேசினேன். உனக்கு கண்டிப்பாக நீதி பெற்று தருவேன்.. கலங்காதே என உறுதியளித்தேன். இந்த விஷயத்தில் அய்யாவைத்தான் நம்பியிருக்கிறேன் என்றார் அந்த தம்பி அழுதபடியே. அவரது நம்பிக்கை வீண் போகாது!

கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கொல்லப்பட்ட தொழிலாளி கோவிந்தராசுவின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத் தராமல் நான் ஓயமாட்டேன். கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் கலங்க வேண்டாம். கொடியவர்களின் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அஞ்ச வேண்டாம். பணிய வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பதற்றமான சூழல் உண்டாகியுள்ளது. திமுக எம்.பி. ஆலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஆலையிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Source,Image Courtesy: Asianet , Ramadoss Twiter


Tags:    

Similar News