250 சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் - ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை!

Update: 2022-05-17 07:10 GMT

காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் வீடு மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று அவர்களுக்கு சொந்தமான டெல்லி, மும்பை என்று பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மீண்டும் சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது எதற்காக சோதனை நடத்தப்படுகிறது? அதாவது சோதனையின் ஆரம்பத்திலேயே சி.பி.ஐ. வழக்கு போட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். 250 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 2010 மற்றும் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட விசாக்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. சட்டவிரோத விசா வழங்குவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக கார்த்தி சிதம்பரம் பெற்றுள்ளார். இதனை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது கண்டுப்பிடித்துள்ளனர். இது பற்றி கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் தான் தந்தை, மகன் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Source, Image Courtesy: Malaimalar

Tags:    

Similar News