மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்காணிப்பில் தமிழகம்!

Update: 2022-05-27 11:44 GMT

தமிழகத்திற்கு ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் என்னென்ன நடைபெறுகிறது என்று டெல்லியில் இருந்தவாறே கண்காணித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இது பற்றி ராமானுஜம் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவுகளில் பல்வேறு வகையிலான தகவல்களை பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி மீது அன்பும், பாசமும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகம் பிரதமர் மோடியை விரும்புகிறது எனவும் தமிழில் பதிவிட்டுள்ளார். இதனை தமிழகத்தில் உள்ள தி.மு.க. தரப்பினர் யாரும் எதிர்பார்க்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பொறுத்தவரையில் பிரதமரின் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பதிவில ரீடுவிட் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

ஆனால் பிரதமர் மோடி தமிழகத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியை அவரே தமிழில் ட்விட் செய்துள்ளார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என டெல்லி வட்டாரங்களில் விசாரித்த தகவலின்படி, தமிழகத்திற்கு பிரதமர் மோடி இதற்கு முன்பு வரும்போது தி.மு.க. எதிர்க்கட்சியில் இருந்தது. அதன் காரணமாக கோ பேக் மோடி என்கின்ற வாசகத்தை அவர்கள் ட்விட்டரில் ட்ரென்டிங் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் இம்முறை தமிழகத்தில் தி.மு.க. ஆளுங்கட்சியாக உள்ளது. எனவே தி.மு.க. ஐ.டி.விங் நேரடியாக பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் களம் இறங்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, தமிழக பா.ஜ.க. சார்பில் வணக்கம் மோடி என்கின்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரென்டிங் செய்யப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் ட்ரென்டிங் செய்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென்று தமிழில் ட்விட்டர் பதிவு போட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அமித்ஷா பேசி வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிலும் வரஉள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து குறைந்தது 10 தொகுதிகளை கைபற்ற வேண்டும் என்கின்ற தகவல்களையும் அமித்ஷா அண்ணாமலைக்கு கூறி வருகிறார். தி.மு.க.வின் பித்தலாட்டங்களை பொதுமக்களிடம் தெரிவிக்கவும் கூறியுள்ளார். தேசிய சிந்தனை தமிழகத்தில் தலை தூக்க வேண்டும். ஆன்மீக அரசியல் செய்யவும் அண்ணாமலைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அசைன்மென்டுகள் டெல்லியில் இருந்தபடி வருகின்றது.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News