மீண்டும் தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.!
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 7ம் தேதி அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு முன்னர் அதிமுக, பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.