தி.மு.க., எம்.பி.,க்களுக்கு மத்திய அமைச்சர்கள் உதவி, கண்காணிக்கும் அமித்ஷா - பின்னணி என்ன?
தி.மு.க., எம்.பி.க்கள் எங்களை எதிர்த்து அரசியல் செய்து வந்தாலும் கடைசியாக எங்களிடம்தான் உதவிக்கு வருகின்றனர் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளனர்.
தி.மு.க.வை சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் அடிக்கடி மத்திய அமைச்சர்களை சந்தித்து உதவிகளை கேட்டு பெற்று வருகின்றனராம். இவர்கள் அமைச்சர்களை சந்திக்கும் சமயத்தில் தாங்கள் நடத்தும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகளையும் உடன் கூட்டி வருகின்றனர்.
அப்படி வரும் 4 தி.மு.க. எம்.பி.க்களும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அடிக்கடி சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது தி.மு.க. எம்.பி.க்கள் நடத்தும் தொழில் பிரச்சனைகளுக்காகவும், வரி விதிப்பில் விலக்கு கேட்டும் பல முறை அமைச்சர்களிடம் உதவி கேட்டு வருவதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த உதவிகள் செய்யப்படுவது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தெரியும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு டெல்லியில் அதே கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் உதவியை கேட்பது என்பதை பொதுக்கள் எப்படி கருதுவார்கள் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar