தமிழக மக்கள் மத்தியில் மாற்றம் - அடுத்து நீங்கள் என்ன தெரியுமா? பிரதமர் மோடி தமிழக நிர்வாகிகளிடம் கூறியது என்ன?

தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2022-07-30 12:09 GMT

தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமர் மோடி இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார். அப்பொழுது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில தலைவர்களை அழைத்து அவர்களிடம் மாநிலத்தின் நிலவும் சூழல் மற்றும் பிற விவரங்களை கேட்டு தெரிந்தார்.

அப்போது நிர்வாகிகள் 2019ல் பா.ஜ.க கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி, அப்பொழுது உள்ள தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் ஏற்படுத்திய தவறான பிம்பத்தால் உருவானது! ஆனால் தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் 15 மாதங்களில் சூழல் மாறி உள்ளது, தனித்துப் போட்டியிட்ட உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க'வுக்கு கிடைத்த ஓட்டு சதவீதம் அதை உறுதிப்படுத்துகிறது என பிரதமரிடம் கூறியுள்ளனர்.

மேலும் தமிழக இளைஞர்களிடம் பிரிவினைவாதை சிந்தனை நீடிக்க வேண்டும் என தி.மு.க நினைக்கிறது, அதனால்தான் பிரிவினைவாதம் பேசும் கட்சியினரை கண்டு கொள்வதில்லை, சமீபத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரிவினைவாதத்தை பேசினார் என சில நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் பல முக்கிய விஷயங்கள் அந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறப்பட்டதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எல்லாம் உன்னிப்பாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, 'தமிழகத்தில் 'கோ பேக் மோடி' எனக் கூறியதையும் பார்த்து விட்டேன் 'கம் பேக் மோடி' எனக் கூறியதையும் பார்த்துவிட்டேன் தமிழக மக்கள் தற்பொழுது பொறுப்புடன் என்னை வரவேற்றனர். இந்த மக்களுக்கு நேரம் பார்க்காமல் சேவை செய்ய வேண்டும், கட்சியில் இணைந்த பலரும் தான் பெரிய ஆள் என நினைத்து கருத்தக் கூடாது, கட்சியில் ஏற்கனவே உள்ள சீனியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில்' கூறியுள்ளார்.


Source - Dinamalar

Similar News