ஆ! ஒரு வருஷம் ஆச்சா அப்ப கட்சி மாறனுமே! - டாக்டர் சரவணனின் கட்சி மாறும் கலாட்டா கதை

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்த சரவணனை கட்சியிலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-14 06:07 GMT

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருந்த சரவணனை கட்சியிலிருந்து மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுரை டாக்டர் சரவணன் எந்தெந்த கட்சிகளில் இருந்து வந்தார், குறுகிய காலத்தில் கடந்து வந்தார் என்ற பாதையை பார்க்கலாம். சரவணன் பா.ஜ.க'வில் சேர்ந்து ஓராண்டு காலம் மட்டுமே இருந்தார்.

அதாவது டாக்டர் சரவணன் ம.தி.மு.க'வில் செயல்பட்டு வந்தார், ம.தி.மு.க மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த இவர் கடந்த 2015ல் பா.ஜ.கவில் முதன் முறையாக இணைந்தார், அதன் பிறகு அப்பொழுது ம.தி.மு.க'வில் ஒரு வருடம் மட்டுமே இருந்துவிட்டு பின் 2016 ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க'வில் இணைந்தார். தி.மு.க'வின் மருத்துவ அணையின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார்.

2017 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், இந்த தேர்தலில் அ.தி.மு.க'வின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார், ஆனால் அவர் காலமானதால் மீண்டும் 2019'ல் தேர்தல் நடந்தது.

இதில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார், திருப்பரங்குன்றம் தொகுதியில் நலத்திட்டங்களை செய்து தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க'வின் கூட்டணியில் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, இதனால் சரவணனுக்கு அந்த தொகுதியில் சீட்டு மறுக்கப்பட்டது. இதனால் அந்த சமயத்தில் அறிவாலயம் மீது கடும் அதிருப்தி அடைந்த காரணத்தினால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தி.மு.க'வில் இருந்து விலகி அவர் மீண்டும் பா.ஜ.க'வில் இணைந்தார்


கட்சியில் இணைந்த அடுத்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட டாக்டர் சரவணனுக்கு பா.ஜ.க'வில் சீட் வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார்.

நேற்று மதுரையில் நடைபெற்ற பி.டி.ஆர் கும்பல் மோதலில் டாக்டர் சரவணன் கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக அவரை பா.ஜ.க தலைமை நீக்கி உள்ளது. தற்பொழுது அவர் எந்த கட்சிக்கு செல்வார் என அவருக்கு தெரியாத குழப்ப நிலையில் உள்ளார்.

Similar News