விமான நிலையத்திற்குள் 2 லேப்டாப்களை எடுத்து சென்ற பி.டி.ஆரை அலறவிட்ட பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்!

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (செப்டம்பர் 30) காலை 6 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்புடன் வந்ததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-30 08:06 GMT

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (செப்டம்பர் 30) காலை 6 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 லேப்டாப்புடன் வந்ததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அங்கு இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு லேப்டாப்களை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், எந்த கட்டுப்பாடும் பயணிகளுக்கு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் உதவி ஆய்வாளர் இரண்டு லேப்டாப்புகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று அனுமதி மறுத்துள்ளார். அப்போது தான் நிதியமைச்சர் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த விஷயம் பற்றி மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதே போன்று மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதன் பின்னர் லேப்டாப்புடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Source: Dinamalar

Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News