18 கிரிமினல் வழக்கில் இருந்து தானே விடுவித்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Update: 2022-01-21 10:15 GMT

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டிருந்த 18 கிரிமினல் வழக்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்து அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் அந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2021ம் ஆண்டு வரை அதிமுகு ஆட்சி இருந்தது. அப்போதைய அரசுக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் நடத்தி வந்தார். இதனால் அவர் மீது அவதூறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இதனிடையே இந்த வழக்குகள் நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆவணங்களை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News