முதலமைச்சர் இடஒதுக்கீட்டை அறிவித்தார்.. நாளை கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பார்.. பா.ம.க. தலைவர் பேட்டி.!
முதலமைச்சர் இடஒதுக்கீட்டை அறிவித்தார்.. நாளை கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பார்.. பா.ம.க. தலைவர் பேட்டி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்தது. இதற்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.
இந்நிலையில், இந்த மசோதா குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது: உள்ஒதுக்கீடு அறிவித்த முதலமைச்சருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.
மேலும், கூட்டணி பற்றி அறிவிப்பை நாளை ராமதாஸ் முறைப்படி அறிவிப்பார். இடைக்கால வெற்றிக்கு தனது நன்றியை ராமதாஸ் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டார். எனவே ராமதாஸ் நாளை முறைப்படி அதிமுக கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.