முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை.!;

Update: 2021-02-10 11:28 GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

பிரசாரத்தை முடித்த பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டம் வழியாக இன்று மாலை 4 மணிக்கு சேலத்திற்கு வருகை புரிகிறார். இதன் பின்னர் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் செல்கிறார். அங்கு கட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

முதலமைச்சர் வருகையொட்டி மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓமலூருக்கு வருகை புரிகின்றனர். அங்கிருக்கும் கூட்டத்தின் மத்தியில் உரையாற்றலாம் என கூறப்படுகிறது. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
 

Similar News