7ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் முதலமைச்சர்.!
7ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் முதலமைச்சர்.!
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வருகிறது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு தயாரிகியுள்ளார்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி முன்மொழிந்துள்ளது. இதனையடுத்து அவர் மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதே போன்று கடந்த மாதம் ஜன., 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், வருகிற 7ம் தேதி (ஞாயிறு) திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். போரூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் திறந்த வேனில் நின்றபடி மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருவார் என கூறப்படுகிறது.