முதல்வர் பத்தி விமர்சனமா போடு வழக்கு உடனே! - சமூக வலைதளங்களில் நடவடிக்கை துரிதம்

A case has filed against the ADMK cadre who criticized Tamil Nadu Chief Minister.

Update: 2021-07-29 15:00 GMT

கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என பேசிவிட்டு தி.மு.க'வை பற்றி சமூகவலைதளங்களில் பேசுபவர்களை கட்டம் கட்டி தூக்கி வருகிறது தி.மு.க.

முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் ஆபாசமாக பதிவிட்டதாக கூறி அருப்புக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மகாமூர்த்தி மகன் தென்னரசு, இந்த மகாமூர்த்தி அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆவார்.

இவரின் மகன் தென்னரசு அவரது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க பற்றியும், முதலமைச்சர் குறித்தும் ஆபாசமாக பதிவு செய்ததாக ஏராளமான புகார்கள் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு கிடைத்ததாக கூறப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசுவை கைது செய்துள்ளனர். மேலும், தென்னரசு பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து அவரது பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தி.மு.க'வை சேர்ந்தவர்கள், நடுநிலை என சொல்லிக்கொள்பவர்கள் மற்ற கட்சி தலைவர்கள், பிரமதர், உள்துறை அமைச்சர் போன்றவர்களை பற்றி இழிவாக பேசி வருவதை கண்டுகொள்ளாமல் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசியதை மட்டும் குறிப்பெடுத்து அவரை கைது செய்துள்ளது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Tags:    

Similar News