5 நாளில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு.. எடப்பாடியா.? அல்லது வேறு யார்.. குஷ்பு தகவல்.!

5 நாளில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு.. எடப்பாடியா.? அல்லது வேறு யார்.. குஷ்பு தகவல்.!

Update: 2021-01-02 12:38 GMT

தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை இன்னும் 5 நாட்களில் பாஜக அறிவிக்க இருப்பதாக தமிழக பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கட்சிகள் இருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று தொடக்கத்தில் இருந்தே பாஜகவினர் சொல்லி வருகின்றது.

அதிமுகவின் அமைச்சர்கள் சிலரே, தேசிய கட்சி என்பதால் பாஜகதான் அறிவிக்கும் என்றும் சொல்லி வந்ததை பார்த்தோம். ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதையும் பார்க்க முடிந்தது. மேலும், அதிமுகவின் அறிவிப்பு அவர்களின் கட்சியின் நிலைப்பாடு என்று பாமக தலைவர் கூறியிருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து அதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியிருந்தார்.

இந்நிலையில் 5 நாட்களில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பாஜக அறிவிக்கும் என்று குஷ்பு கூறிய கருத்து தற்போது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

தேஜகூ, கூட்டம் நடந்திருக்கிறதா? அல்லது 5 நாட்களில் அந்த கூட்டம் நடைபெறுமா என்பது கேள்வி குறியாக உள்ளது. தற்போது பாஜகவே முதலமைச்சர் வேட்பாளரை குறித்து அறிவிப்பு வெளியிடும் என்பது அதிமுக மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் பரபரப்பாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 

Similar News