பா.ஜ.க.வில் கூட்டம், கூட்டமாக இணையும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் - சிறுபான்மையினர் பிரிவு அணியின் கச்சிதமான வேலை
பா.ஜ.க.வில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கூட்டம், கூட்டமாக இணைந்து வருகின்றனர் என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மருத்துவர் டெய்சி சரண் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சிறுபான்மையினர் அணியின் தலைவர்கள், நிர்வாகிகள் 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் தெரிந்து கொள்வதற்காக பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதே போன்று தமிழகத்தில் தேசிய சிறுபான்மை அணியின் தலைவர் ஜமால் சித்திக், நேரடியாக சிறுபான்மையின மக்களை சந்தித்து அவர்களுக்கு பா.ஜ.க. பற்றி விளக்கி வருகிறார். இதனால் பொதுமக்கள் பா.ஜ.க. மேல் நல்ல மதிப்பு வைத்து தங்களை கட்சியில் இணைத்து வருகின்றனர்.
சென்னையில் பா.ஜ.க. மாநில செயலாளர் வினோத் பி.செல்வம், சிறுபான்மையினர் அணியின் மாநிலத் தலைவர் மருத்துவர் டெய்சி சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த சிறுபான்மையின தலைவர் டெய்ஸி சரண், தற்போது தமிழகத்தில் மிக வேகமாக கட்சி வளர்ந்து வருகிறது. மக்கள் கூட்டம், கூட்டமாக பா.ஜ.க.வை நோக்கி வருகின்றனர். சிறுபான்மையின மக்களுக்காக பிரதமர் மோடி செய்த நன்மைகள் அவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பா.ஜ.க.வை நோக்கி வருகின்றனர். விரைவில் வல்லரசு நாடாக பிரதமர் மோடி இந்தியாவை மாற்றி காட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Asianetnews