எங்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது என ஸ்டாலின் கூறியது விரக்தியின் வெளிப்பாடா?

எங்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது என ஸ்டாலின் கூறியது விரக்தியின் வெளிப்பாடா?

Update: 2020-10-19 08:09 GMT

தி.மு.க கடந்த பத்தாண்டுகளாக எதிர்கட்சியாக இருக்க காரணமே ஊழல், ரவுடியிசம், நில அபகரிப்பு, குடும்ப அரசியல் மற்றும் குறுநில மன்னர் முறைகளை போல் வாரிசுகளின் அடாவடி. இந்த காரணங்களால் கருணாநிதி கடைசி காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. தற்பொழுது அவரது மகன் ஸ்டாலின் தலைமையில் இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது தி.மு.க. கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டது ஆனால் கட்சியை மக்கள் ஆதரிக்க தயாராகி விட்டார்களா என்பது தான் இப்பொழுது தி.மு.க மனதில் உள்ள கேள்விகளை அனைத்தும்.

இதற்க்கு பதில் நேற்றைய பொழுது ஸ்டாலின் கூறிய வார்த்தைகளில் உள்ளது, "நாம் திமுககாரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது" என்ற பதில்தான் அது.

ஆம் தி.மு.க'வை மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதையும் வரும் தேர்தலில் கடந்த பத்து ஆண்டுகளை எவ்வாறு தி.மு.க'வை மக்கள் ஆட்சி பீடம் அருகில் வர விடாமல் செய்தார்களோ அது போலவே இந்த முறையும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க'வை ஆட்சிக்கு அருகில் கூட வரவிடமாட்டார்கள் என்பதை உணர்ந்த ஸ்டாலின் கூறிய வார்த்தைகள்தான் அவை. ஒட்டு மொத்த விரக்தியின் வெளிப்பாடு.

ஒருவன் எப்பொழுது "யாரும் எங்களை அசைக்க முடியாது" என்று கூறுவான்? தனக்கு இனி வாய்ப்பில்லை, தன்னை இனி ஏற்க மாட்டார்கள், தன்னால் இனி இந்த சமுதாயத்தில் மிளிர முடியாது, தன்னை இந்த சமூகம் இனி ஏற்கவே ஏற்காது, தன்னை ஒரு பொருட்டாகவே இந்த சமூகம் ஏற்கவில்லை என தன்னை நன்கு உணர்ந்த ஒருவனின் விரக்தி வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும்.

நேற்று புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரனின் இல்லத் திருமண விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அப்போது பேசிய அவர், "ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் வழங்கப் போகும் தீர்ப்பை எவராலும் மாற்ற முடியாது. தெளிவான தீர்ப்பை திடமான தீர்ப்பை உறுதியான தீர்ப்பை உதயசூரியனுக்கு ஆதரவான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்.

அதைச் சிந்தாமல், சிதறாமல் ஒருங்கிணைத்துப் பெற வேண்டிய கடமையும், பொறுப்பும் தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழகம், பேரூர் கழகம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. உங்களில் ஒருவனான நான் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் சுமந்திருக்கிறேன்.

இந்த இயக்கத்தைப் பார்த்து, குடும்பக் கட்சி என்று சொல்பவர்களுக்கு, இந்த கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான் என்று பதில் சொல்கின்ற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் குவாரி காண்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கருப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் தி.மு.க'காரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது" என்று பேசினார்.

அதாவது மக்கள் தி.மு.க'வை எந்த காரணங்களால் புறக்கணிக்கிறார்களோ அதே காரணங்களை அடுக்கி நாங்கள் இப்படித்தான் எங்களை ஏதும் செய்ய முடியாது என்று விரக்தியின் விளிம்பில் ஸ்டாலின் பேசினார்.

Similar News