குறுக்கு புத்தியில் யோசித்து 'ட்விட்டர்' எம்.பி செந்தில்குமார் போட்ட ட்விட்.!

குறுக்கு புத்தியில் யோசித்து 'ட்விட்டர்' எம்.பி செந்தில்குமார் போட்ட ட்விட்.!

Update: 2020-10-21 17:47 GMT

ஒரு எம்.பி என்பவர் மக்களின் தேவைகளை உணர வேண்டும். தொகுதியின் பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டும், அதனை முறையாக நாடாளுமன்ற சபையில் நேரத்தில் முழங்க வேண்டும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் எந்த வகையில் தனக்கு வாக்களித்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இயலும் என்ற நோக்கம் இருக்க வேண்டும். இவையெல்லாம் குறைந்தது கட்சியில் 20 வருடமாவது உழைத்து அதன் பலனாக படிப்படியாக மேலே உயர்ந்து பின் எம்.பி என்ற அந்தஸ்தை எட்டியவர்களுக்கு சுலபம்.

மாறாக வாரிசு மற்றும் அந்த வாரிசின் நண்பனாகிய இன்னொரு வாரிசு ஆகிய இருவரின் சிபாரிசில் சுலபமாக எம்.பி சீட் வாங்கி மத்திய அரசின் மீது குற்றஞ்சுமத்தியே அதன் மூலம் வெறுப்பை ஊற்றி வளர்த்த வாக்குகளை வாங்கி சுலபமாக எம்.பி ஆனவர்களுக்கு இந்த மக்கள் சேவை எல்லாம் வேப்பங்காயாக கசக்கும்.


எதில் குறை காணலாம்! எதில் தில்லுமுல்லு காணலாம் என்ற குறுக்குபுத்தியே வேலை செய்யும். இப்படி குறுக்கு புத்தி வேலை செய்யும் எம்.பியாக உயர்ந்து நிற்கிறார் தி.மு.கவின் 'ட்விட்டர்' எம்.பி திரு.செந்தில்குமார் அவர்கள். இவரை தர்மபுரி எம்.பி என குறிப்பிடுவதை விட 'ட்விட்டர்' எம்.பி என தாரளமாக குறிப்பிடலாம் காரணம் இவர் ட்விட்டரில் மட்டுமே எம்.பியாக வாழ்க்கை நடத்துவதால்.

அந்த வகையில் 'ட்விட்டர்' எம்.பி செந்தில் குமார் இன்று தனது ட்விட்டர் பதிவில் மத்திய அரசு பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' திரைப்படத்திற்கு விருது அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை குறிப்பிட்டு,

"அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்..."

என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் 'ட்விட்டர்' எம்.பி செந்தில்குமார்.

அதாவது மத்திய அரசு ஒரு திரைப்படத்தை பாராட்டி அளித்த விருதையும் ஏதோ தன் கட்சிக்கு ஆள் சேர்க்க விருது அளித்தது போல் குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளார். அதாவது விருது வழங்கும் நிகழ்வை கூட கட்சி நிகழ்வாக பார்க்கும் பழக்கம் தி.மு.க'வில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் ஏனெனில் "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" என கருணாநிதி புகழ் பாட ஒட்டுமொத்த திரையுலகத்தையும் உபயோகம் செய்தது அனைவரும் அறிவர். அது போலவே இதையும் நினைத்துள்ளார் போலும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது இவரின் தி.மு.க கட்சி பழக்கம் போல் ஒரு நடிகரை வளைக்க அவருக்கு விருது கொடுப்பது, அவரை வைத்து தனது கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் படம் தயாரிப்பது என தி.மு.க'வின் செயல்களை ஒத்து பா.ஜ.க'வின் செயல்கள் இருக்கும் என நினைத்துள்ளார் எனவும் கருத்து கூறி வருகின்றனர் விமர்சகர்கள்.

மேற்கூறியபடி உதயநிதி மற்றும் அவரது நண்பன் அன்பில் மகேஷ் ஆகிய இருவரின் சிபாரிசில் கட்சியில் உழைக்காமல் இப்படி உழைத்தவர்களை மேலே ஏறி மிதித்து எம்.பி சீட் வாங்கியதால் இப்படி ட்விட் செய்ய தோணுகிறது எனவும் மாறாக மக்களுக்கு உழைத்து மேலே வந்திருந்தால் இப்படி தோணாது எனவும் கருத்துக்கள் நிலவுகின்றன.

Similar News