தினமும் 'வைப்ரேஷன்' மோடில் சுற்றும் தி.மு.க - ஆட்சிக்கு வர எதையும் செய்ய தயார்.!

தினமும் 'வைப்ரேஷன்' மோடில் சுற்றும் தி.மு.க - ஆட்சிக்கு வர எதையும் செய்ய தயார்.!

Update: 2020-10-25 13:56 GMT

தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கான சாத்தியகூறுகள் மிக அதிகம், இந்த தேர்தலில் திராவிட கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க'விற்கு ரொம்பவே முக்கியம் காரணம் அதன் முக்கிய தலைவர்கள் முறையே கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தலாகும். எனவே இந்த இரு கட்சிகளின் எதிர்காலம் இந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்தே அமையும். இந்த தேர்தலில் வெற்றி வாகை சூட அ.தி.மு.க தன் கட்சியின் அனைத்து பிரச்சிகளையும் முடித்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளது. மறுபுறம் தி.மு.க'வோ ஸ்டாலினை முன்னிருத்துகிறது. 

இந்த இரு கட்சிகளில் தேர்தல் நெருங்க நெருங்க அதிக கலக்கத்தில் தூக்கமில்லாமல் இருப்பது தி.மு.க'தான் காரணம். ஸ்டாலினின் தலைமையில் அதிருப்தி இல்லாத திராவிட முன்னேற்ற கழகம் அதனை வெளிகாட்டாமல் இருக்கிறது. காரணம் தேர்தல், ஏற்கனவே கட்சியில் குடும்ப ஆதிக்கம் கரை புரண்டு ஓடும் சூழலில் கட்சியின் மூத்த உடன்பிறப்புகள் அதை ஸ்டாலினால் கையாள தெரியவில்லை என வெளிப்படையாகவே கூறி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மக்களை திசை திருப்ப, ஆளும் மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தியான மனநிலை இருப்பதாக பிரசங்கம் செய்ய முயற்சிக்க தி.மு.க'வின் முக்கிய மூன்று முகங்களாக தற்பொழுது உடன்பிறப்புகளால் கருதப்படும் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மற்றும் கனிமொழி ஆகிய மூவரும் இனி தி.மு.க தப்பிக்க வேறு வழியில்லை என போராட்ட களமாக தமிழகத்தை சித்தரிக்க முயல்வது அப்பட்டமாக அவர்களது நடவடிக்கை மற்றும் அறிக்கைகளில் தெரிகிறது.

ஸ்டாலினோ ஆளுநர் மாளிகை போராட்டம் ஒருபுறம் எதற்கெடுத்தாலும் எடப்பாடி அரசை கண்டிப்பது ஒருபுறம் என போராட்ட வைப்ரேஷன் மோடுலேயே உள்ளார். கனிமொழியோ வழக்கமான டெம்ப்ளேட'டான தமிழ் மொழிக்கு ஆபத்து என அலறுவதில் குறியாக உள்ளார்.

இவர்களை தாண்டி உதயநிதியோ தமிழக மக்கள் அனைவருமே நிதம் தூக்கமின்றி தவிக்கும் மனநிலையில் இருப்பதாகவும் அதற்கு அருமருந்து தி.மு.க ஆட்சி மட்டுமே என பொய்யுரை பரப்புவதிலும் சுற்றி சுழன்று வருகிறார். ஆக இந்த மூன்று தி.மு.க'வின் முகங்களுக்குமே நன்றாக தெரிகிறது தி.மு.க இதைச்செய்தது, தி.மு.க அதைச்செய்தது என்று கூறினால் கண்டிப்பாக மக்கள் ஏற்க மாட்டார்கள் மாறாக "தி.மு.க ஊழலை'தான் உருப்படியாக செய்தது" என திருப்பி அடிப்பார்கள் எனவே ஆளும் அரசுகள் மீது பழி சுமத்தி தமிழகத்தை போராட்ட களமாக்கி அதில் வாக்குகளை அறுவடை செய்யலாம் என கணக்கு போட்டே தி.மு.க செயல்படுகிறது.

ஆகையினால் தான் எப்பொழுதும் தி.மு.க "வைப்ரேஷன்" மோட்'டில் சுற்றுகிறது. ஏற்கனவே தி.மு.க'வின் உள்ளடி வேலைகள், ஊழல் லீலைகள், ரவுடியிச ராஜ்ஜியங்கள், நில அபகரிப்பு தொல்லைகள், கட்டபஞ்சாயத்து கருமாந்திரங்கள் என எந்த தொந்திரவும் இல்லாமல் மக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்கின்றனர். அது பொறுக்கவில்லை தி.மு.க'விற்கு!

Similar News