ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்க்கப்படுவது உறுதி - எல்.முருகன் காரசார பேச்சு!

ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்க்கப்படுவது உறுதி - எல்.முருகன் காரசார பேச்சு!

Update: 2020-10-27 08:01 GMT

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக இந்து வேதங்கள் குறித்தும் மனு சாஸ்திரம் குறித்தும் தாக்கிப் பேசினார். அப்போது இந்துப் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என மனுதர்மம் கூறுவதாக இல்லாத ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

திருமாவளவனின் இந்துப் பெண்கள் குறித்த இந்த ஆபாசப் பேச்சை கண்டித்து தமிழமெங்கும் அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.

குறிப்பாக திருமாவளவனின் இந்த பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு எதிராக போராட்டங்களையும் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று 27ஆம் தேதி பா.ஜ.க மகளிரணி சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி நாளை மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களுக்கு முன்பாக இப்போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில் நவம்பர் 6ம் தேதி‌ திருத்தணி முருகன் கோவிலில் துவங்க‌வுள்ள ஆறுபடை வீடு "வெற்றிவேல் யாத்திரை" வெற்றி பெற இறைவனை வேண்டி மாநில தலைவர் முனைவர் திரு.எல்.முருகன் அவர்கள் கமலாலயத்தில் நடைபெற்ற "காப்பு கட்டுதல்" விழாவில் பங்கேற்று காப்பு கட்டிக்கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன் அவர்கள் பட்டியலின நீதிபதிகளை பற்றி தவறாக பேசியவர்களையும், தற்போது ஒட்டுமொத்த பெண்களையும் பற்றி இழிவாகப் பேசிய திருமாவளவனையும் கண்டிக்க இயலாத ஸ்டாலினும் திமுகவும் சமூக நீதி பற்றி பேச அருகதை அற்றவர்கள் என்றார்.

தாய்குலத்தை ஆபாசமாக அவமதித்த அவர்களை நம் மகளிர் சொந்தங்கள் எங்கு சென்றாலும் விடமாட்டார்கள், சரியான பாடத்தை அவர்கள் பாணியில் கற்பிப்பார்கள் என்றார். நீங்கள் மன்னிப்புக் கேட்கும்வரை எங்கள் தாய்மார்கள் உங்களை சும்மாக விடமாட்டார்கள்: அதுவரை நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்றார்.

மேலும், தாய்க்குலமும் உங்களுக்கு எதிரி, ஆண்டவனும் உங்களுக்கு எதிரி நிச்சயம் உங்கள் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது, உங்கள் கனவு தகர்த்து எறியப்படுவது உறுதி என்று உறுதியாகக் கூறினார்.

எங்கள் பெண் தெய்வங்கள் மீனாட்சி, மாரியம்மாள் உங்களை சும்மாக விட மாட்டார்கள், தமிழ் கலாச்சாரம், பண்பாட்டுக்கு எதிராக பேசி வரும் இவர்கள் தமிழ் விரோதிகள் மட்டுமல்ல, தேச விரோதிகள், இவர்களை தூக்கி ஏறிய இந்த விஜயதசமி நாளில் காப்புக் கட்டி சங்கல்பத்தை ஏற்றுக் கொண்டதாக எல்.முருகன் அவர்கள் கூறினார். 

Similar News