ஈரோட்டில் சிறுத்தைகளுக்கு சம்பவம் செய்த பா.ஜ.க-வினர் - புறமுதுகிட்ட திருமாவளவன்!

ஈரோட்டில் சிறுத்தைகளுக்கு சம்பவம் செய்த பா.ஜ.க-வினர் - புறமுதுகிட்ட திருமாவளவன்!

Update: 2020-10-27 13:32 GMT

ஈரோட்டு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பா.ஜ.க-வினர் கருப்பு கொடி காண்பித்து எதிர்த்ததால் அங்கிருந்து திரும்பி சென்றார்.

சமீபத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்கிற ரீதியில் சர்சையாக திருமாவளவன் பேசியது இந்து சமுதாய மக்களிடம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இந்த சம்பவத்தை இந்து சமுதாய மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் உடனே ஓடி வரும் ஒரே கட்சியாகிய பா.ஜ.க கண்டித்தது. அதன் நிர்வாகிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து திருமாவளவன் பேச்சிற்கு பல குடும்ப பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ் பேட்டை என்ற இடத்தில் தனது நண்பரான டாக்டர் நவீன் பாலாஜி என்பவரது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் நேற்று சென்றார். இந்த தகவல் கிடைத்ததும், இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க'வினர் அந்தப் பகுதியில் ஏராளமாக கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டிருந்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் போலீஸ் டி.எஸ்.பி தங்கவேலு தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் கார் அந்த இடத்திற்கு வந்தபோது, பா.ஜ.க-வினர் மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் கோஷம் போட்டனர். பிறகு இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதிக்கொள்ளும் நிலை உருவானது.

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரின் வாகனம் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதனால் அந்தப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதனால் திருமாவளவன் திரும்பி சென்றார். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருமாவளவன் மீது மக்கள் கொந்தளிப்பாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Similar News