சமாஜ்வாதியை வீழ்த்த பா.ஜ.க-வுடன் சேர தயார் - மாயாவதியின் அதிரடி அறிவிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!

சமாஜ்வாதியை வீழ்த்த பா.ஜ.க-வுடன் சேர தயார் - மாயாவதியின் அதிரடி அறிவிப்பால் உச்சக்கட்ட பரபரப்பு!

Update: 2020-10-29 11:18 GMT

2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த உத்திர பிரதேசத்தில் பரம எதிரிகளான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வினோத தேர்தல் கூட்டணி அமைத்தன. எனினும், இந்த பொருந்தாத கூட்டணிக 80 இடங்களில் வெறும் 15 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. பா.ஜ.க கூட்டணி 64 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

அப்போதில் இருந்தே பொருந்தா கூட்டணியாக இருந்த பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் 10 ராஜ்ய சபா இடங்கள் இந்த மாதம் காலியானது. அதில் 8 இடங்களில் பா.ஜ.க எளிதில் வெற்றி பெற முடியும் என்ற நிலையும், 1 இடத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற முடியும் என்ற நிலையும் இருந்தது. 

மாயாவதி எஞ்சிய ஒரு இடத்திற்கு வேட்பாளரை அறிவித்து அவருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு கரம் நீட்டும் என எதிர்பார்த்தார். ஆனால், சமாஜ்வாதி கட்சியோ தன் ஆதரவு வேட்பாளர் இன்னொருவரை சுயேட்சையாக நிறுத்தி மாயாவதியின் வேட்பாளரை தோற்கடிக்க ஸ்கெட்ச் போட்டது. 

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மாயாவதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் "அடுத்த உத்திர பிரதேச சட்டசபை மேல்சபை தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளரை எப்படியேனும் தோற்கடிப்பேன். இதற்காக பா.ஜ.க-வின் ஆதரவை கோரவும் தயங்கப் போவதில்லை" என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அத்தோடு சமாஜ்வாதி கட்சியுடன் 2019 தேர்தலில் கூட்டணி அமைத்தது மிகப்பெரிய தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி நிறுத்திய சுயேட்சை வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டு, மாயாவதி கட்சி வேட்பாளரின் வேட்புமனு ராஜ்ய சபா தேர்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பா.ஜ.க-வுக்கு எட்டு இடங்களுக்கு போன ஓட்டுகள் போக மிஞ்சிய ஓட்டு மாயாவதியின் வேட்பாளருக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது போட்டி வேட்பாளர் இல்லாத பட்சத்தில் மாயாவதியின் வேட்பாளர் போட்டியின்றி ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதன்மூலம் பா.ஜ.க - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு சமயம் அப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்தியா முழுக்க இருக்கும், இந்தியா முழுக்க தலித் சமுதாய மக்கள் இக்கூட்டணி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News