கொரோனா சூழலால் ரஜினியின் அரசியல் யுக்தி மாறலாம், ஆனால் பின்வாங்கமாட்டார் : ஆதரவாளர்கள் நம்பிக்கை.!
கொரோனா சூழலால் ரஜினியின் அரசியல் யுக்தி மாறலாம், ஆனால் பின்வாங்கமாட்டார் : ஆதரவாளர்கள் நம்பிக்கை.!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் 6 மாதங்களில் தேர்தல் என்ற நிலையில் கட்சிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. என்றாலும் கூட்டணி அமைப்பதில் அவைகள் தெளிவின்றி உள்ளனர். அதற்கு காரணம் சட்டசபை தேர்தலுக்கு முன் எனது அரசியல் வருகை இருக்கும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியிருந்தார். அவரின் நிலை குறித்து அறிந்து கூட்டணி பற்றிய முடிவுகள் எடுக்கலாம் என அவர்கள் ஒத்திவைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் அவர்களது பெயரில் கடந்த சில நாள்களாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தது. ரஜினி பெயரில் சமூக வலைதளங்ககள் மூலமாக பரப்பப்படும் அந்த அறிக்கையில்,
``என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடுகூட்டி, கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்''
ஆனால் , `` `என்னுடைய மருத்துவர்கள் என் உடல்நிலை பற்றிக் கூறுகையில் " கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது எழுபது. உங்களுக்கு சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம்.