தமிழகத்தில் ஹிந்து சுபமுகூர்த்த நாளில் சாதனை படைத்த பத்திரப்பதிவு - அதிர்ச்சியில் தி.க, தி.மு.க கோஷ்டி!

தமிழகத்தில் ஹிந்து சுபமுகூர்த்த நாளில் சாதனை படைத்த பத்திரப்பதிவு - அதிர்ச்சியில் தி.க, தி.மு.க கோஷ்டி!

Update: 2020-10-31 11:15 GMT

தமிழகம் பெரியார் மண் என திராவிட கட்சிகளான தி.மு.க, தி.க போன்ற கட்சிகளும், அந்த கட்சிகளிடம் சொற்ப தொகுதிகளுக்காக மடியேந்தும் பிற கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் போன்ற இயக்கங்களும் பறைசாற்றி வருகின்றனர். போதாக்குறைக்கு பெரியார் என்ற பெயரை ப்ராண்ட் ஆக பிரபலபடுத்த முயற்சி செய்கின்றனர். இதன் காரணமாக தமிழகம் பெரியார் மண் இங்கு இந்துத்துவ சம்பிரதாயங்கள் மற்றும் இந்துமத சடங்குகள் அனைத்துமே பொய் இதனை பெரியார் தடி கொண்டு எதிர்த்தார் என அறைகூவல் விடுத்து தன் அரசியல் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் கூற்று உண்மையல்ல வெறும் பிதற்றல் தான் இது பெரியார் மண் அல்ல ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த தூய்மையான ஆன்மீக மண் என நடக்கும் சம்பவங்கள் மூலம் தமிழக மக்கள் உணர்த்திகொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த இரு தினங்கள் முன்பு அதாவது அக்டோபர் 29'ம் தேதி தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக ரூபாய் 123.35 கோடி மதிப்புள்ள பத்திரப்பதிவு நடந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் வணிகவரித்துறை செயலாளர் திருமதி.பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் விடுத்த செய்தியாவது, "தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.123.35 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்துள்ளது இது ஒரேநாளில் நடப்பது முதன்முறையாகும். இன்று (29/10/20) மட்டும் 20,307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.

இதன் முக்கிய காரணமாக இருப்பது அன்றைய தினம் ஐப்பசி சுக்ல பட்ச திரயோதசி, ரேவதி நட்சத்திரம் குருவாரம் கூடிய சுபயோக சுபமுகூர்த்த நாள் ஆகும். இது இந்துக்களின் முறைப்படி ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சுபமுகூர்த்த தினம் ஆகும்.

ஆனால் திராவிட கட்சிகளும், இயக்கங்களும் மற்றும் அதன் தோழமை கட்சிகளும் தமிழகம் "பெரியார் மண்" என்ற மாயையை பரப்பி வரும் நிலையில் இது பெரியார் மண் அல்ல ஆன்மீக மண் அதிலும் இந்துக்களின் பழக்கவழக்கம் மற்றும் சம்பிரதாயங்களை சாஷ்டாங்கமாக கடைபிடிக்கும் ஆன்மீக மண் என்பதை திராவிம இயக்கங்களுக்கு தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கின்றனர்.

இதனை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் புரிந்துகொள்ள வேண்டும் இல்லையே அதை மண் அவர்கள் தலையில் விழும் நாள் வெகுதொலைவில் இல்லை.

Similar News