ஜல் ஜீவன் திட்டத்தை தனது திட்டம் என விளம்பரப்படுத்தும் பினராயி.!

ஜல் ஜீவன் திட்டத்தை தனது திட்டம் என விளம்பரப்படுத்தும் பினராயி.!

Update: 2020-11-01 10:44 GMT

மத்திய அரசு அறிவித்துள்ள ஜல் ஜீவன் திட்டத்தை மாநிலத்தில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த திட்டத்தை கால தாமதப்படுத்தக் கூடாது என்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கேரள அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கேரள மாநிலத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டிற்குள் 100% ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தமுள்ள 67.15 லட்சம் வீடுகளில் 49.65 லட்சம் வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று தேசிய ஜல்சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கேரள மாநிலத்திற்கு ₹ 404.24 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் மாநில அரசு திட்டத்தை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் தற்போது குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்னும் 2493 வசிப்பிடங்களில் தண்ணீர் இணைப்பு வழங்கப்படாதது குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசின் ஜல் ஜீவன் அமைப்பு கேரளாவை கேட்டுக் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளை மத்திய அரசுத் திட்டம் என்பதை மறைத்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு தங்கள் திட்டம் என்பது போல் பிரச்சாரம் செய்ததை கேரள பா.ஜ.கவினர் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு முழுக்க முழுக்க 800 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், கேரள அரசு ஊடகங்களில் இது மாநில அரசின் திட்டம் என்பது போல் விளம்பரம் செய்து வருகிறது. இந்த திட்டம் பற்றிய ஊடக விளம்பரங்களில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மூன்று அமைச்சர்களின் புகைப்படத்தைப் போட்டு ஒரு பைசா செலவில்லாமல் கம்யூனிஸ்ட் அரசு விளம்பரம் தேடுவதாக கேரள பா.ஜ.கவினர் குற்றம் சாட்டினர். மேலும் ஜல் ஜீவன் திட்டம் கேரள அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News