அசுரர்களின் கதறல் ஒலிக்க தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையப்போகும் "வேல் யாத்திரை".!

அசுரர்களின் கதறல் ஒலிக்க தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையப்போகும் "வேல் யாத்திரை".!

Update: 2020-11-03 09:54 GMT

பா.ஜ.க'வின் வெற்றி திருப்புமுனை'களின் பின்புலத்தில் கண்டிப்பாக யாத்திரைகளின் வரலாறு இருக்கும் இந்திய அளவில். குடும்ப அரசியலின் ஆதிக்கத்திலும், ஊழல் ராஜாங்கத்திலும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் மக்களை இந்த யாத்திரைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வைத்துள்ளதை வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன.

1990'ல் அத்வானி அவர்கள் தொடங்கி வைத்த யாத்திரை மிக முக்கியமானது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி 1990'ம் ஆண்டு ரத யாத்திரை புறப்பட்டார். குஜராத் மாநிலம் சோம்நாத் என்ற இடத்தில் இருந்து அயோத்தி நோக்கி சென்றார். இதில் பல்வேறு இடர்பாடுகள், கைது, கலவரம் என ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்புக்கு ஆளாக்கியது.

தங்க நிறத்தில் ஜோடிக்கப்பட்ட நவீன ரதத்தை சுற்றி காவிக் கொடிகள் பறக்க, "ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்ப வேண்டும்" என்று முழங்கிக்கொண்டிருந்தது அந்த யாத்திரையில் பங்கேற்ற காவிகளின் கூட்டம். அவர்களின் அட்டவணைப்படி, அயோத்தியில் ஆரம்பித்து ஆறு மாநிலங்கள் வழியாக வந்து, கடைசியில் கேரளாவிலிருந்து நெல்லை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, இராமேஸ்வரத்தில் அவர்களின் ரத யாத்திரையை முடித்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தனர். அதன்படியும் அவர்கள் திட்டமிட்டபடி சில இடங்களில் தடைபட்டாலும் யாத்திரை வெற்றிகரமாக முடிந்தது.

அவ்வாறு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட யாத்திரையின் வேண்டுதல் பலனாக சரியாக 20 ஆண்டுகள் கழித்து இன்று ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மற்றொன்று 2011 ஆண்டு நடந்த 'ஏக்தா யாத்திரை', இளைஞர் பிரிவு தேசியத் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற யாத்திரை பேரணி கொல்கத்தா'வில் இருந்து தொடங்கியது. அதன் பயணமானது மேற்கு வங்காளத்தில் துவங்கி ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா வழியாக பயணப்பட்டு இறுதியாக ஸ்ரீநகரில் ஜனவரி 26'ம் தேதி பேரணியை முடித்து இந்திய தேசியக் கொடியை 26 ஜனவரி 2011 இந்தியாவின் குடியரசு தினமான அன்று ஏற்ற திட்மிட்டு பேரணி நடைபெற்றது. ஆனால் அப்போதைய ஆளும் காங்கிரஸ் இந்த பேரணியை நடைபெறவிடாமல் தடுத்தது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற பா.ஜ.க ஜாம்பவான்களை காஷ்மீர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனால் பேரணியின் தாக்கம் வட மாநிலங்களில் பா.ஜ.க மக்கள் மனதில் ஆழ பதிய காரணமாக அமைந்தது.

இந்த யாத்திரைகளின் வெற்றி முடிவுகளை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் பா.ஜ.க அழுத்தமாக காலூன்ற தமிழக பா.ஜ.க தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் தற்பொழுது 'வேல் யாத்திரையை' திட்டமிட்டுள்ளார். நவம்பர் 6'ம் தேதி திருத்தணியில் துவங்கப்படும் யாத்திரை டிசம்பர் 6'ம் தேதி திருச்செந்தூரில் முடிவடைகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளையும் தொட்டு அந்த வழியா செல்லும் இந்த யாத்திரை தற்போதைய தமிழக அரசியலில் அரசியல்வாதிகளுக்கு இந்துக்களின் மீதான காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு அரசியல், ஒடுக்கப்படும் இந்து சமுதாயத்தின் மக்கள் உரிமைகள் என அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.

ஏற்கனவே கறுப்பர் கூட்ட கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரத்தில் தமிழக திராவிட கட்சிகளின் உண்மை முகம் இந்து சமுதாய மக்களுக்கு பா.ஜ.க'வினரால் தோலுரித்து காட்டப்பட்டது. மேலும் இந்த யாத்திரையின மூலமாக வஞ்சிக்கப்டும் இந்து சமுதாய மக்களின் உண்மை நிலை அவர்களுக்கு உணர வைக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எல்.முருகனின் தொடக்கம் முதல் இன்று வரை தமிழகத்தில் அபரிமிதமாக வளர்ந்து வரும் பா.ஜ.க கண்டிப்பாக இந்த வேல் யாத்திரையின் மூலம் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ஒரு வரலாற்று திருப்புமுனையாக இருக்கும் என்று பா.ஜ.க'வை அதன் எதிர்கட்சிகள் நம்புகின்றனர் அதனால்'தான் 'வேல் யாத்திரைக்கு தடை வேண்டும்' என்ற கதறல்கள் எல்லாம்.

இது தமிழக அரசியலில் பா.ஜ.க காலம்.

Similar News