"கீழ்தரமாக விபூதியை கீழே கொட்டி அவமதித்த ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

"கீழ்தரமாக விபூதியை கீழே கொட்டி அவமதித்த ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

Update: 2020-11-03 22:20 GMT

பசும்பொன்.முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டி அவமதித்ததற்கு தமிழகத்தில் இந்து சமுதாயத்தை மதிக்கும் அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க'வின் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,

அப்போது அவர் கூறியது, "கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலோ, 2021 சட்டப் பேரவை பொதுத்தேர்தலோ எது வந்தாலும் சந்திக்கின்ற வகையில் பா.ஜ.க'வின் கட்சி ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கட்சி நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும், உத்வேகமும்,உற்சாகமும் இருப்பதைக் காண முடிகிறது" என்றார்.

மேலும் ஸ்டாலினின் விபூதி கொட்டி இழிவுபடுத்திய விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "தெய்வங்களையும், தெய்வ சின்னங்களையும் கொச்சைப்படுத்துவது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு விருப்பமுடைய ஒன்றாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஏற்கெனவே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்டாலின் சென்றபோது அவருக்கு மரியாதை கொடுத்து சமய சின்னத்தையும் அணிவித்தார்கள். ஆனால், அதனை ஒரு நொடிக்குள் அழித்து அவமானப்படுத்திவிட்டார்.

இதைப்போன்றே அனைத்து மக்களும் புனிதமாகக் கொண்டாடும் பசும்பொன்.முத்துராமலிங்க தேவரின் நினைவிடம், என்னைப் பொறுத்தவரை ஒரு கோயிலாகும். லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடி அவர்களின் நேர்த்தி கடனை செய்வது வழக்கம். பல கட்சி தலைவர்களும் அங்கு வந்து செல்கின்றனர். அங்கு எந்த விதமான பாகுபாடும் பார்க்கமாட்டார்கள். இந்நிலையில் அங்கு சென்ற ஸ்டாலின் அவருக்கு வழங்கப்பட்ட திருநீரை எடுத்து தரையில் கொட்டிவிட்டு வரக்கூடிய அளவில் இருக்கிறார். அவர் மிகவும் கீழ்தரமான செயலை செய்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்த ஒன்று. இதற்கு ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்" என்றார்.

Similar News