தென்காசியில் பஞ்சாயத்து கூட்டத்தில் மோதிக்கொள்ளும் தி.மு.க'வினர் - கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிதடி

தென்காசியில் தி.மு.க பஞ்சாயத்து கூட்டத்தில் உட்கட்சி மோதல் காரணமாக தி.மு.க'வினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

Update: 2022-05-11 12:00 GMT

தென்காசியில் பஞ்சாயத்து கூட்டத்தில் உட்கட்சி மோதல் காரணமாக தி.மு.க'வினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து மொத்தம் 14 வார்டுகள் உள்ளன, அதில் 10 வார்டுகளை தி.மு.க'வும், 3 வார்டுகளை காங்கிரசும், ஒரு வார்டில் ம.தி.மு.க'வும் வெற்றி பெற்றிருந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க சார்பில் தமிழ்ச் செல்வியும் போட்டி வேட்பாளராக கனிமொழியும் களமிறங்கியதில் தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றார்.



அதன் பின்னர் நடந்த இரு கூட்டங்களிலும் ஆறாவது வார்டு உறுப்பினர் கனிமொழி கேள்விகளே அதிகம் எழுப்பியதால் குழப்பம் ஏற்பட்டது அத்துடன் மட்டுமில்லாது தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று தலைமையிடத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி'க்கு எதிராக புகார் அளித்தார் கனிமொழி.

மாவட்ட பஞ்சாயத்து சார்பாக நடந்த இரு கூட்டங்களிலும் கூச்சல் குழப்பம் நீடித்தது இந்த நிலையில் நேற்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கனிமொழி தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என வெளி ஆட்களை அழைத்து வந்திருந்தால் கூட அரங்கினுள் வந்திருந்த வெளியாட்களும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.


அதுவரை வாக்குவாதம் ஆக இருந்த நிலையில் ஒருமையில் பேசும் வார்த்தை சண்டையாக மாறியது இதனால் இரு தரப்பினரும் ஆபாச வார்த்தை பிரயோகத்தில் இறங்கியதில் அங்கு கூச்சல் குழப்பம் நீடித்தது.

இருதரப்பினரையும் சமாதானம் செய்ய காவல்துறையினர் முயன்று சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 


Source - Junior Vikatan

Similar News