நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (12ம் தேதி) முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து சேலத்திற்கு காரில் வருகை புரிகிறார். இதன் பின்னர் முதற்கட்டமாக வாழப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி அளவில் சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் அதிமுகவின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.