15ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுவையில் 30 தொகுதிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் துவங்குகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுவையில் 30 தொகுதிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் துவங்குகிறது.
இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கி விட்டது.
இந்நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று போடி நாயக்கனூரில் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.
அதே போன்று சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 15ம் தேதி அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.