அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்கிறார்.!

தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

Update: 2021-03-12 02:48 GMT

தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இன்று மாலை 5 மணிக்கு பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி, ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து பரப்புரையை செய்கிறார்.


 



இதன் பின்னர் கெங்கவல்லி தொகுதியில் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும் ஆத்தூர் தனித்தொகுதி வேட்பாளரான ஜெயசங்கரனை ஆதரித்தும் அவர் வாக்கு சேகரிக்கிறார்.

இதனை தொடர்ந்து சேலம் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News