தே.மு.தி.க.வில் பக்குவம் இல்லாத அரசியல் வாதிகள் உள்ளனர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது.
இதனை தொடர்ந்து தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று கூறினார். விஜயகாந்த் மகனும் அதிமுக குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தேமுதிக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்: பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என கூறினார்.
மேலும், அவர் பேசும்போது, ஒரு கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல, ஒரே தொகுதியை பல கூட்டணி கட்சிகள் கேட்பார்கள். இதையெல்லாம் பேசி ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கப்படும்.
புதிய தமிழகம் கூட்டணியில் எங்களுடன் இல்லை. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக இழப்பு என்பதே கிடையாது. தேமுதிக பக்குவம் இல்லாத அரசியல் வாதிகளாக உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.