இல.கணேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2021-08-22 10:01 GMT
இல.கணேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள இல.கணேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதனால் தமிழகத்தில் இருந்து மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட இல.கணேசனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: MK Stalin Twiter

Image Courtesy: Twiter

Tags:    

Similar News