8 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்ட சி.எம்.டி.ஏ - அண்ணாமலை புகாரால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அதில் புகாரின் பேரில் சிக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-18 14:02 GMT

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அதில் புகாரின் பேரில் சிக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூத்த திட்ட அதிகாரிகள் உள்ளிட்ட எட்டு அதிகாரிகளை இடமாற்றம் செய்து சி.எம்.டி.ஏ உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ செயல்படுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் தெரிவித்தார்.

அந்த புகாரில் சி.எம்.டி.ஏ'வில் மூத்த திட்ட அதிகாரியாக உள்ள ருத்ரமூர்த்தி என் உள்ளிட்ட சிலரின் பெயரை அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அப்போது அண்ணாமலை தெரிவித்த புகார்களில் ஆதாரம் இல்லை என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் அண்ணாமலை புகாரில் சுட்டிக்காட்டப்பட்ட மூத்த திட்ட அலுவலர் ருத்ரமூர்த்தி உள்ளிட்ட எட்டு அதிகாரிகள் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

நான்கு மூத்த திட்ட அலுவலர்கள், இரண்டு துணை திட்ட அலுவலர்கள், இரண்டு உதவி திட்ட அலுவலர்கள் என 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்பொழுது பரபரப்பை ஏற்படடுத்தி உள்ளது. 


Source - Dinamalar

Similar News