தி.மு.க. மாவட்ட செயலாளராக மாறிட்டாரா கோவை மாவட்ட ஆட்சியர்? ஸ்டாலினை வரவேற்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 22) வருகை புரிந்துள்ளார். இதற்காக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.

Update: 2021-11-22 05:57 GMT

கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 22) வருகை புரிந்துள்ளார். இதற்காக மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரு முதலமைச்சர் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம். இதற்காக யாருக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தற்போது கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்து முதலமைச்சர் ஸ்டாலினால் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

அதாவது முதலமைச்சர் வருகையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். இதற்காக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் குறுச்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கொங்கு மாவட்ட மக்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News