பட்டா, கத்திகளுடன் ரவுடிகள்: போலீசார் திமுகவுடன் சேர்ந்து தேர்தல் வேலை செய்றாங்க! எஸ்.பி.வேலுமணி திடுக்கிடும் தகவல்!

Update: 2022-02-18 13:06 GMT

கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினரையும், ரவுடிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசாரை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆளும் கட்சி சொல்றதை கேட்டு போலீசார் அதிமுக வேட்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். இது போன்ற அராஜக போக்கை போலீசார் நிறுத்த வேண்டும் என்றார். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியர் சமீரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிமுகவினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் எனவும் கரூரில் இருந்து கோவைக்கு வந்துள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ரவுடிகளையும் உடனடியாக வெளியேற்றும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை செய்தனர்.

இதன் பின்னர் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில், சென்னை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ரவுடிகளை கொண்டு வந்து கோவை மக்களையும், வேட்பாளர்களை மிரட்டி வருகின்றனர். திமுகவினர் போலீசார் வாகனங்களில் பரிசு பொருட்களை எடுத்து செல்கின்றனர். இதில் இன்ஸ்பெக்டர்களும் நேரடியாக பரிசுப்பொருட்களை எடுத்து சென்று வினியோகம் செய்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினர்.

மேலும், அதிமுகவினர் மீது வேண்டும் என்றே பொய் வழக்கு போட்டு வருகின்றனர். தேர்தல் விதிமீறல் அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. போலீசார் திமுகவினரை போன்று செயல்படுகின்றனர். இதனை உடனடியாக ஆட்சியர் தடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Facebook

Tags:    

Similar News