கோவை, பழனி எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!

கோவை, பழனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

Update: 2021-11-10 10:38 GMT

கோவை, பழனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 17 மாதங்களாக கோவை, பழனி இடையே ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. இதனிடையே கோவை, போத்தனூர், பொள்ளாச்சி இடையே சுமார் 40 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் கோதவ, பழனி இடையே முற்றிலும் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. 


இதனிடையே பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், உடனடியாக ரயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே இன்று முதல் (நவம்பர் 10) ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியது.


இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கொடியசைத்து கோவை, பழனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை துவக்கி வைத்தார். ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிந்து அவருக்கு இனிப்புகளை வழங்கி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த ரயில் இயக்கப்பட்டதற்கு பழனி முருக பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News