தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்திக்கும் அமைச்சர்கள் குழு.. காரணம் இதுதானாம்.!

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்திக்கும் அமைச்சர்கள் குழு.. காரணம் இதுதானாம்.!

Update: 2021-01-11 09:42 GMT

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மற்றும் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் குழு இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்திக்கின்றனர்.

வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மிகப்பெரிய தலைவர்களாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். அதிமுக, திமுக தற்பொழுது இருந்தே கூட்டணி கட்சிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சி முன்மொழிந்துள்ளது. இதனால் எம்.பி., தேர்தலில் இருந்த கட்சிகளை மீண்டும் இழுப்பதற்கு அவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

முதலாவதாக தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொண்டு விட்டது. அடுத்து, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த சந்திப்பானது நிகழ்கிறது. இதில் முக்கியமாக கூட்டணி மற்றும் எத்தனை தொகுதிகள் என்பன பற்றி முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு வேறு மாதிரி இருக்கும் என கூறியிருந்தார். தற்போது இந்த சந்திப்பு அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

Similar News