"ஆளுநர் தேவையா இப்ப?" - கம்யூனிஸ்ட் கட்சியின் கதறலும் துவக்கம் !

Breaking News.

Update: 2021-09-12 07:00 GMT

"ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்கிற கேள்வியெல்லாம் இருக்கிறது" என புது ஆளுநர் வருகை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருக்கிறார். 

மகாகவி பாரதியாரின் 100'வது நினைவுநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் இருக்கும் பாரதியார் இல்லம் மற்றும் நினைவு மண்டபத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொதுவாக ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார். ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்கிற கேள்வியெல்லாம் இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள்தான் செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, ஆளுநர் என்ற மத்திய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைத்து ஆளுவது என்பது பொருத்தமற்றது" என கூறியுள்ளார்.


Source - ஜூனியர் விகடன்

Tags:    

Similar News