நெல்லையில் உட்கட்சி தேர்தலில் மோதல் - போலீசாரை பொளந்த தி.மு.க.வினர்!

Update: 2022-04-29 15:47 GMT

நெல்லை மத்திய மாவட்ட திமு.க. உட்கட்சித் தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. அப்போது கட்சி அலுவலகத்தில் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றம் மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனால் கட்சி பதவிகளுக்காக போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டு வந்தது.

இதற்கு தி.மு.க. சட்டத்துறை மாநில துணை செயலாளர் கண்ணதாசன் தேர்தல் பொறுப்பாளராக இருந்து கவனித்து வந்தார். இதற்கிடையில் வேட்புமனு தாக்கலின்போது இரண்டு பிரிவினருக்கு இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் மைதீன் மல்கர் என்ற போலீசாரும் காயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு போலீசாருக்கு காலில் காயம் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நெல்லை மாநகர பகுதிகளில் பரபரப்பையும், பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆளும் கட்சியான தி.மு.க.வினரே இப்படி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டு, சமாதானம் செய்ய வந்த போலீசாரையும் தாக்கியிருப்பது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News