காங்கிரஸால் நாட்டுக்கு பிரச்சனை: சோனியா தொகுதியில் உ.பி முதல்வர் யோகி கடும் தாக்கு!

காங்கிரஸ் கட்சியால் எப்போதுமே நாட்டுக்கு பிரச்சினை ஏற்படுவதாக சோனியா காந்தியின் வெற்றி பெற்ற ரே பெரேலியில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரப்புரை. விரைவில் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் பாஜக சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

Update: 2022-01-01 08:36 GMT

இதனிடையே நேற்று (டிசம்பர் 31) காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியின் தொகுதியான ரே பெரேலியில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சி என்றுமே நாட்டிற்குப் மிகப்பெரிய பிரச்சினைதான். தீவிரவாதத்தின் வேராக காங்கிரஸ் உள்ளது. நாட்டில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம். மதவாதத்தையும், மொழி பேதத்தையும் விதைத்து வருகிறது. ரே பெரேலி தொகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் பாஜகவை நோக்கி வருகின்றனர். விரைவில் காங்கிரஸ் தொகுதி என்பதை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Hindu Tamil

Image Courtesy: News 18

Tags:    

Similar News