காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் விரைவில் வீதிக்கு வரும்.. கர்நாடகா பா.ஜ.க. ட்வீட்.!

சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று சொல்லி வருகிறார்.

Update: 2021-06-21 11:37 GMT

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் விரைவில் வீதிக்கு வரும் என்று அம்மாநில பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு இப்போது இருந்தே தந்திரமாக வகுத்து வருகிறார்.


 



இதன் காரணமாக முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. மேலும், சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று சொல்லி வருகிறார். ஏற்கனவே அடுத்து வருகின்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக் கூறிவிட்டு, தற்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.




 


சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்துவதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியாமல் தவித்து வருகிறார். எனவே விரைவில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் வெடித்து, வீதிக்கு வரும். இவ்வாறு பாஜக ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது

Similar News