எங்களுக்கு குறைந்த தொகுதியா? தி.மு.க.வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் அதிமுக ஏறக்குறைய கூட்டணி கட்சிகளை இறுதி செய்துவிட்டது.

Update: 2021-03-05 12:21 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் அதிமுக ஏறக்குறைய கூட்டணி கட்சிகளை இறுதி செய்துவிட்டது.

ஆனால் திமுகவில் இதுவரை விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ஆனால் தேசிய கட்சியாக சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு இன்றுவரை கூட்டணியில் இடம் இருக்கிறதா இல்லையா, என்பதை திமுக சொல்லவில்லை.


 



தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை அழைத்து அவமானப்படுத்தியதுதான் மிச்சம் என்று அழகிரியே தனது கட்சி கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதிகளவிலான தொகுதிகளை கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் சென்னை சத்திய மூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து திமுகவில் நீடிப்பார்களா அல்லது கூட்டணியை விட்டு வெளியேறுவார்களா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.

Similar News