வரும் அக்டோபர் 16'ம் தேதி அன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
காந்தி பெயரை வைத்துக்கொண்டு நாட்டை ஆண்டு வந்த நேரு குடும்பத்திற்கு சொந்தமான காங்கிரஸ் கட்சி அழியும் விளிம்பில் உள்ளது. அதற்கு சரியான தலைவரை கூட நியமிக்க இயலாத கையறு நிலையில் காரிய கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடைய உடல்நிலை காரணமாக, அவரால் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியவில்லை. என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் நிரந்தர தலைவர் நியமிக்கப்படாமலேயே உள்ளது. யார் தலைவர் என கடை நிலை தொண்டர்களுக்கே தெரியாமல் இந்தியாவில் ஒர் கட்சி உள்ளது என்றால் அது காங்கிரஸ் மட்டுமே!
இப்படிப்பட்ட அவல நிலையில் வரும் அக்டோபர் 16 அன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வரும் 16'ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும்" என குறிப்பிட்டுள்ளார்.