தி.மு.க MP R.S பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் அனுமதி!

தி.மு.க MP R.S பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் அனுமதி!

Update: 2021-01-19 07:10 GMT

தி.மு.க எம்.பி ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் அனுமதி அளித்துள்ளார். 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தி.மு.க இளைஞரணி தலைமையகம் அமைந்துள்ள சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டத்தில் பேசிய ராஜ்ய சபா MP ஆர் எஸ் பாரதி  திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.

இதுவரை மத்திய பிரதேசத்தில் ஒரு தலித் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக அமரவில்லை என்றும் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு பிறகு, வரதராஜன் என்ற ஒரு தலித் மெட்ராஸ் உயர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றும் அதற்கு பிறகு ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 7,8 பேர் நீதிபதிகளாக அமர்த்தப்பட்டனர் என்றும் இது திராவிட இயக்கம் தலித்துகளுக்கு கொடுத்த பிச்சை என்றும் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். 

Full View

 ஊடகங்கள் சிவப்பு விளக்கு பகுதியை போல் செயல்படுவதாகவும், காசு கொடுத்தால் எப்படியாவது தலைப்பு செய்திகளையும் உருவாக்கி விடுவார்கள் என்றும் பேசினார். இந்த இரண்டு கருத்துக்களுமே கடும் சர்ச்சையை உருவாக்கியது.

 தலித்துகள் தங்கள் சொந்த திறமையிலும் உழைப்பிலும் முன்னேற வில்லை அது திராவிட இயக்கத்தின் பிச்சை மட்டுமே என்ற ரீதியில் அவர் பேசிய பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

 நீதிபதிகளை குறித்து தவறாகப் பேசியதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்தார். அவர் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து பேச மட்டுமே முயற்சித்ததாகக் கூறினார். 

ஆனால் ஊடகங்கள் குறித்து பேசியதற்கு அவர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்ட அவர், சில மணிநேரங்களில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது நீதிமன்ற வழக்கு தொடுக்க வேண்டும் என்ற ரீதியில் தற்பொழுது தமிழக அட்வகேட் ஜெனரல் அதற்கு அனுமதி அளித்துள்ளார். 

அந்தப் பேச்சு உண்மையில் உருவாக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தை அவமதிக்க, அவதூறு செய்யும் வகையில் பேசிய அந்த பேச்சுக்கு கண்டிப்பாக வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் இந்த மனு தேவை இல்லாதது அல்லது உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் இது நீதிமன்றத்தின் முன்னால் கண்டிப்பாக ஆராயப்பட வேண்டிய வழக்கு என்றும் இதற்காகத்தான் ஒப்புதல் வழங்குவதாகவும் விஜய் நாராயணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Similar News