'கிறிஸ்தவ மிஷனரி இல்லைனா தமிழ்நாடு பீகார் போல மாறியிருக்கும்' - தி.மு.க'வின் கிறிஸ்துவ பாசம்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள் மிகப்பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் அவர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பீகார் போன்று மாறியிருக்கும் என சபாநாயகர் அப்பாவு பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சபாநாயகர் அப்பாவு மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் உள்ள செயிண்ட் பால் சர்ச்சில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அப்பாவு பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கிறிஸ்தவ பாதிரியார்கள், சிஸ்டர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பீகார் போன்று மாறியிருக்கும். நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் சிஸ்டர்கள் மட்டுமே. இந்த தி.மு.க., அரசை உருவாக்கியவர்களும் அவர்களே. மேலும் உங்களின் பிரார்த்தனைகளும், விரதமும் இந்த அரசாங்கத்தை உருவாக்கியது.
"திராவிட மாடல் என்று சொல்கின்ற இந்த அரசுக்கு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிருஸ்தவ மதம் தான், கிருஸ்த்துவ பாதிரியார்கள் தான் , உங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அரசு என்று முதல்வருக்கு தெரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள்
— Narayanan Thirupathy (@Narayanan3) July 25, 2022
திராவிட மாடல் அரசுக்கும், சமூக நீதிக்கும் கத்தோலிக்க பாதரியார்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நீங்கள் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை. (கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்) உங்களது பிரச்சனைகளை உடனடியாக முதலமைச்சரிடம் கொடுத்தால் அவர் நடவடிக்கை மேற்கொள்வார். மாறாக மறுக்க மாட்டார். அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே காரணம் என்று முதலமைச்சருக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சர்ச்சையான வீடியோ தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.