கடனை தள்ளுபடி செய்தாலும் ஓட்டு மட்டும் போடுவதில்லை.. கட்சி மீட்டிங்கில் புலம்பிய குமாரசாமி.!

கடனை தள்ளுபடி செய்தாலும் ஓட்டு மட்டும் போடுவதில்லை.. கட்சி மீட்டிங்கில் புலம்பிய குமாரசாமி.!

Update: 2020-11-23 19:05 GMT

விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தன்னிடம் பேசும் விவசாயிகள், தனக்காக ஓட்டு மட்டும் போடுவதில்லை என்று கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஜேடிஎஸ்  கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பங்கேற்று பேசியதாவது: நான் முதலமைச்சராக இருந்தபோது ரூ.25 ஆயிரம் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். இதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பல்வேறு வழிகளில் திரட்டியுள்ளேன்.

மேலும், பெங்களூருவில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதாக பல கட்சிகள் கூறிவந்தது. யாரும் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவது இல்லை. 14 மாதங்கள் முதலமைச்சராக இருந்தபோது நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்.

மாநிலத்தில் காங்கிரசும், பா.ஜ.,வும் மாறி மாறி கமிஷன் அரசு என குற்றச்சாட்டு வைத்தது. ஆனால் எனது அரசை யாருமே குறைசொல்ல முடியாது. தனியார் பள்ளிகளை போல் தரமான பள்ளிகளை அரசு திறக்க வேண்டும். நீங்கள் எனது விவசாய கடனை தள்ளுபடி செய்தீர்கள் என்று விவசாயிகள் என்னிடம் கூறி வருகின்றனர். ஆனால் எனக்கு ஓட்டு மட்டும் போடுவதே இல்லை. இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தை நிர்வாகிகளிடம் புலம்பித் தள்ளியுள்ளார்.
 

Similar News