மார்ச் 1ம் தேதி முதல் தமிழகத்தில் யாருக்கெல்லாம் தடுப்பூசி போடப்படும்.!
corona vaccines
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே மார்ச் 1ம் தேதி முதல் இரண்டாம் கட்டம் தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.
அதே போன்று தமிழகத்தில் கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அப்போது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மார்ச் 1ம் தேதியிலிருந்து தடுப்பூசி போடப்படும் என கூறப்படுகிறது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 60 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கான கணக்கெடுக்கும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் 1.60 கோடி பேர் இருப்பது தெரியவந்துள்ளது.
விரைவில் இவர்களுக்கான தடுப்பூசி போடும் பணியானது துவங்கப்படும் என கூறப்படுகிறது. அனைவருக்கும் இந்த ஆண்டிற்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.