மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்.!

ராமநாதபுரம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று வானதி சீனிவாசன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2021-03-27 05:57 GMT

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.




 


அந்த வகையில் இன்று கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட, ராமநாதபுரம் பகுதியில் மாட்டு வண்டியில் சென்று வானதி சீனிவாசன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.




 


மேலும், செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனால் தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

Similar News